’மானிடவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கடவுள் உயர் சாதி இல்லை. சிவன் கூட பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர்தான்’ என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் நேற்று பாலின நீதி குறித்து டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 


’’நம்முடைய கடவுள்களின் ஆதிமூலத்தை மானிடவியல் அடிப்படையில் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். எந்தக் கடவுளுமே பிராமணர் கிடையாது. ஷத்திரியரும் கிடையாது. 


கடவுள் சிவன் பட்டியலினத்தை சார்ந்தவர்


கடவுள் சிவன் நிச்சயம் பட்டியலினத்தை சார்ந்தவராகவோ அல்லது பழங்குடியினராகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில், சுடுகாட்டில் பாம்புடன் அமர்ந்து, குறைவான உடைகளையே அவர் அணிந்திருக்கிறார். பிராமணர்கள் சுடுகாட்டில் அமர்ந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 


கடவுள்கள் லட்சுமி, சக்தி ஏன் ஜெகன்னாதர் கூட உயர் சாதியைச் சேர்ந்தவராக இருக்க முடியாது. ஜெகன்னாதர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 


ALSO READ | Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


பெண்கள் யாருமே பிராமணர்கள் அல்ல


மனு ஸ்மிருதி பெண்கள் அனைவருக்கும் சூத்திரர்கள் என்னும் நிலையையே அளித்துள்ளது. இது மிகவும் பின்னடவை ஏற்படுத்தக்கக்கூடியது. மனு ஸ்மிருதியின்படி, அனைத்துப் பெண்களுமே சூத்திரர்கள்தான்.


மனிதநேயமே இல்லாத இந்தப் பாகுபாட்டை நாம் ஏன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த நேரத்தில்தான் பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளை மறு வரையறைக்கு உள்ளாக்க வேண்டியது மிகவும் முக்கியம். அவரைப் போன்ற மாபெரும் சிந்தனையாளரை நவீன இந்தியா கொண்டிருக்கவில்லை. 


இந்துத்துவம் மதம் அல்ல


இந்துத்துவம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. அது வாழ்க்கை முறையாக இருக்கும்போது, விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டு, நாம் ஏன் பயப்பட வேண்டும்?


நம்முடைய சமுதாயத்தில் பிணைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட பாகுபாட்டை முதலில் எதிர்த்தவர் கெளதம புத்தர்’’.


இவ்வாறு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்தார். 


பாரம்பரியம் வாய்ந்த டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், கடவுளுக்கு சாதிப் பட்டம் சூட்டும் விதமாகப் பேசியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் வாசிக்க:


NEET UG 2022 Answer Key: நீட் இளநிலைத் தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியீடு: பதிவிறக்குவது எப்படி?
https://tamil.abplive.com/education/neet-2022-answer-key-to-be-released-today-by-7-pm-on-neet-nta-nic-in-69204/amp


மீண்டும் முகமது நபிகள் சர்ச்சை... சிக்கிய பாஜக எம்எல்ஏ... ஹைதராபாத்தில் பதற்றம்
https://tamil.abplive.com/news/india/bjp-mla-arrested-in-hyderabad-over-prophet-remark-after-massive-protests-69195/amp