டெல்லியைச் சேர்ந்த ஷெல்லியோஸ் டெக்னாலப்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மாசு எதிர்ப்பு ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகிறது. இது வெளியில் இருந்து வரும் அனைத்து மாசு துகள்களையும் எடுத்து, வாகன ஓட்டியை அடையும் முன் காற்றை சுத்தம் செய்து தருகிறது. 






புரோஸ் என்று பெயரிடப்பட்ட இந்த ஹெல்மெட், ஷெல்லியோஸ் டெக்னோலாப்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால்  உருவாக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) நிதியைப் பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பார்க்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெல்மெட்டை வணிகமயமாக்க ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களுடன் இணைந்துள்ளது.


ஹெல்மெட்டில் புளூடூத்-இயக்கப்பட்ட பயன்பாடு உள்ளது. இது ஹெல்மெட்டை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்கும். மேலும், இந்த ஹெல்மெட்டின் விலை ரூ. 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


ஹெல்மெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் : 



  •  பிரஷ்லெஸ் டிசி ப்ளோவர் ஃபேன்

  • பார்டிக்யூலேட் ஏர் ஃபில்டர் சவ்வு

  • எலக்ட்ரானிக் சர்க்யூட்

  • மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்


குளிர்கால மாதங்களில் டெல்லி எதிர்கொள்ளும் காற்றின் மோசமான மாசு நெருக்கடியின் போது மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இந்த ஹெல்மெட்டை உருவாக்கினோம் என்று ஷெல்லியோஸ் டெக்னாலப்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 






இதுகுறித்து அந்த நிறுவன தலைவர்களின் ஒருவரான அமித் பதக் கூறுகையில், “சாலைகளில் பயணிக்கும் மக்கள் தினசரி நீண்ட நேரம் வெளிப்படும் மில்லியன் கணக்கான இரு சக்கர வாகன ஓட்டிகளின் புகையால் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாங்கள் கலக்கமடைந்தோம். அதுவும் இரட்டைத் துகள்கள் மற்றும் வாகன உமிழ்வுகளால் அவர்கள் சுவாசம் மிகவும் பாதிக்கப்படுகிறது. 


ஹெல்மெட் அரசாங்கத் தர சோதனையை பெற்றுள்ளது. இது வெறும் 1.5 கிலோ எடை கொண்டதாகவும், மாசுபாட்டை 80% க்கும் அதிகமாகக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.