சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசு கடிதம்:


இந்நிலையில், இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 






அக்கடிதத்தில், சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.






சுகாதார துறை அமைச்சர் திடீட் ஆலோசனைக் கூட்டம் 


மேலும் கொரோனா பாதிப்பு குறித்து, இந்தியாவில் மேற்கொள்ளும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில், கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150க்கு கீழே உள்ளது.


இந்தியாவில் தொற்று பாதிப்பும் குறைந்தே காணப்படுவதால், அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் கொரோனா பாதிப்பு குறித்தான அச்சமின்றி மக்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர். 


இந்நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார துறை, நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில், மத்திய அரசு வரும் நாட்களில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


Also Read: நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 கோடியைத் தாண்டியதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


Also Read:Corona Intranasal Vaccine : பாரத் பயோடெக்கின் நாசி வழி கொரோனா தடுப்பூசி பூஸ்டருக்கு அவசரகால அனுமதி