தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் ஒரு இளம்பெண்ணை அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 



அந்த வீடியோவில், கடத்தல் காரர்களில் ஒருவர் தனது முகத்தை மறைக்கும் வகையில் துணியை கட்டிக்கொண்டு, தனது தந்தையின் முன்பு அப்பெண்ணை காரை நோக்கி இழுத்து சென்று காரின் பின் இருக்கையில் தள்ள முயற்சி செய்தனர். அப்போது இதை எதிர்பார்க்காத அந்த இளம்பெண் பயத்தில் காரின் முன்பு ஓடுகிறார். முகமூடி அணிந்த நபர் விடாது அந்த பெண்ணை தூக்கிசென்று, காருக்குள் தள்ளுகின்றார். உடனடியாக காரும் வேகமாக கிளம்புகிறது. பின்னாடியே அந்த சிறுமியின் தந்தை காரை துரத்தி செல்கிறார். இதோடு வீடியோ காட்சியும் முடிவடைகிறது. இதையடுத்து, சிசிடிவியின் காட்சிகளை ஆதரமாக கொண்டு சிறுமியின் குடும்பத்தார் காவல்துறையில் புகாரளித்தனர். 






தொடர்ந்து, அப்பெண்ணை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வந்தனர். 


இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்க வேளையில், அந்த பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தன் விருப்பத்தின்பேரிலே இந்த கடத்தல் திட்டம் போடப்பட்டதாக வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில், தானும் ஜானி என்கிற ஞானேஷ்வரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளோம். என்னுடன் சம்மதத்துடன் தான் அவளை அழைத்துச் செல்ல ஜானி கோவிலுக்கு வந்திருந்தான். ஜானி முகத்தை மறைக்கும் முகமூடியை அணிந்திருந்ததால் நான் முதலில் குழப்பமடைந்தேன். பின்னர் அடையாளம் கண்டு, அவருடன் சென்று அவரது விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 






முன்னதாக, அப்பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த கே. ஜான் என்ற இளைஞருக்கு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அப்போது, அப்பெண் மைனராக இருந்த காரணத்தினால், அப்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் குற்றவாளிகளையும் பெண்ணையும் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு  ஒருவரையொருவர் சந்திக்கவில்லை.


பெண்ணின் குடும்பத்தினர் சமீபத்தில் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாகவே அந்த இந்த கடத்தல் நாடகம் திட்டமிட்டதாக அப்பெண் திருமணம் செய்த கையோடு வீடியோ வாயிலாக விளக்கமளித்தனர்.