Terrorst Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், படுகாயமடைந்த மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்:


திங்கள்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பலத்த காயமடைந்த ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 






ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவின் துருப்புக்கள் இரவு 7:45 மணியளவில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகி என்ற இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி தந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு அதிகாரி மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.






தேடுதல் வேட்டை தீவிரம்:


தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடைபெற்ற தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததுமே, சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டனர். தாக்குதல் நடத்தி தப்பித்த தீவிரவாதிகளை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.