குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான  ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் 14வது குடியரசுத் துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.




குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகியிருந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜெகதீப்தன்கரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்க்ரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.


இதில், ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்க்ரெட் ஆல்வாவும் 182 வாக்குகளும் பெற்றனர். 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றார். மார்க்ரெட் ஆல்வா 25.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜெகதீப் தன்கர் 72.8 சதவீத வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2.1 சதவீத வாக்குகள் செல்லாதவை.




குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கருக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என்ற நிலையில், அவர் 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளரான மார்க்ரெட் ஆல்வாவிற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வாக்களித்தன. இந்த தேர்தலில், வாக்களிக்கத் தகுதியான 780 நபர்களில் 725 நபர்கள் வாக்களித்தனர். அதாவது, 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.


புதியதாக குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடித்த இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். எம்.பி.யாக பணியாற்றிய இவர் மேற்கு வங்க ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


மேலும் படிக்க : Kerala CM Letter: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கக்கோரி, தமிழக அரசுக்கு பினராயி விஜயன் கடிதம்!


மேலும் படிக்க : சசிகலாவுடன் இணைய வேண்டுமென ஓபிஎஸ் கூறினாரா..? - ஆதரவாளர் சையது கான் விளக்கம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண