ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரோஹ்தக் கார்த்திகேய ஜாகர், எந்த வழிகாட்டுதலும் இன்றி மூன்று கற்றல் ஆப்களை உருவாக்கி, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.


12 வயது சிறுவன்


இந்த 12 வயது சிறுவன் கார்த்திகேயாவின், தந்தை அஜித் சிங், ஒரு விவசாயி. கொரோனா காலத்தில் பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்ககாக சுமார் 10000 மதிப்புள்ள ஒரு மொபைல் ஃபோனை வாங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க அவரே ஆப்களை உருவாக்கி உள்ளார். அவரது சிக்கல்கள் எப்படி ஆப்களாக மாறியது என்பது குறித்து அவரே கூறுகிறார். 



என்னென்ன ஆப்கள்


அவர் பேசுகையில், "கோடிங் செயல்பாட்டின் போது மொபைல் ஃபோன் ஹேங் ஆகுவது போன்ற பல சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் யூ டியூப் உதவியுடன் போனை சமாளித்து படிப்பை தொடர்ந்தேன். நான் மூன்று ஆப்களை உருவாக்கினேன். முதல் ஆப், லூசண்ட் ஜிகே ஆப். அது ஆன்லைனில் பொது அறிவு கற்றுக்கொள்ளுதல் தொடர்பானது. இரண்டாவது ஆப், ராம் கார்த்திக் கற்றல் மையம், இது கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் கற்பிக்கிறது. மூன்றாவது ஆப் ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி. இப்போது, ​​​​இந்த ஆப்கள் மூலம் 45000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்." என்று அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


உத்வேகமும் உற்சாகமும் நிறைந்தவர்


8-ம் வகுப்பு மாணவன் ஜாகர் இவ்வளவு இளம் வயதிலேயே பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உதவித்தொகை பெறுகிறார். அந்த பல்கலைக்கழகத்தில் அவர் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்திகேயாவின் தந்தை அஜித் ஜாகர் பேசுகையில், "தனது மகன் பயன்படுத்தும் மொபைல் ஃபோன் திரை உடைந்திருந்தது, ஆனாலும் உத்வேகமும், உற்சாகமும் அதிகமாக இருந்ததால் அவர் மூன்று ஆப்களை உருவாக்கியுள்ளார்." என்று கூறினார்.



தந்தையின் கோரிக்கை


“எனது மகனுக்கு இன்னும் நிறைய ஆப்களை உருவாக்க உதவுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த திறமைசாலி, அவர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் கிராமத்தில் அதிக மின்வெட்டு உள்ளது, ஆனால் என் மகனின் வைராக்கியம் மிகவும் அதிகம். அவர் அனைத்து நெருக்கடிகளையும் சமாளிக்கிறார். ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும் அவருடன் பேசி அவரது சாதனைகளுக்கு ஊக்கமளித்தனர்,” என்று அஜித் மேலும் கூறினார்.


ஹரியானா முதல்வர்


ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒரு ட்வீட்டில், ஜஜ்ஜரைச் சேர்ந்த 12 வயது கார்த்திகேயா, உலகின் கின்னஸ் புத்தகத்த்தில் இடம்பிடித்து இளைய ஆப் டெவலப்பராக உருவாக்கியுள்ளார். "விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கலைகளுக்குப் பிறகு, ஹரியானா இளைஞர்கள் உலக அளவில் தொழில்நுட்பத்திலும் பிரகாசிக்கிறார்கள், "என்று முதல்வர் மேலும் கூறினார். ஜஜ்ஜார் துணை கமிஷனர் கேப்டன் சக்தி சிங், தேவைப்பட்டால், அந்த 12 வயது சிறுவனுக்கு தகுந்த உதவிகளை வழங்குவோம். மற்ற மாணவர்களுடன் காரத்திகேயாவை பேச வைப்பது போன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்வோம். அதன்மூலம் மற்றவர்களுக்கும் இந்த உத்வேகம் கிடைக்கும்", என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.