Jacqueline Fernandez Bail: ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

ரூ. 200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று  (நவம்பர் 15) உத்தரவிட்டது.

Continues below advertisement

ரூ. 200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று  (நவம்பர் 15) உத்தரவிட்டது.

Continues below advertisement

டெல்லியைச் சேர்ந்த, போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனரான சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி, 200 கோடி ரூபாய் பறித்தது தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு எதிரான வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. 

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயருடன் அமலாக்கத்துறை சேர்த்தது. இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக அமலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டி உள்ளது. அத்துடன் சுகேஷிடமிருந்து 10 கோடி  ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை நடிகை ஜாக்குலின் பெற்றதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்தார். அப்போது, என்னிடம் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, என்னை காவலில் வைக்க வேண்டிய முகாந்திரம் எதுவும் தேவைப்படவில்லை. அதனால், எனக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சைலேந்திர மாலிக், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாக்குலினுக்கு எப்படி பழக்கம்?

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியது மட்டுமின்றி பரிசு பொருட்களையும் பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகர் ரூ.7 கோடிக்கு மேல் நகைகளை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. 

கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

அவர் பல உயர் ரக கார்கள், விலையுயர்ந்த பைகள், உடைகள், காலணிகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை நடிகர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசாக அளித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு கடந்த மாதம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையின் போது, ​​டெல்லி காவல்துறை அவர்களின் பதில்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், பிங்கி இரானி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் வாக்குமூலங்கள் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டன, பின்னர் அவர்கள் இருவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த வழக்கில் மேலும் தெளிவு பெறுவதற்காக ஒன்றாக விசாரிக்கப்பட்டனர்.

 

Continues below advertisement