ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு பாதுகாப்பாக இருந்த மூன்று மோப்ப நாய்கள் பத்திரமாக இந்தியா வந்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்த நாட்டில் இருந்த பல வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். காபூலில் சிக்கித் தவித்த 200 இந்தியகள் நேற்று பாதுகாப்பாக நாடு திரும்பினர். இந்த 200 பேரில் ஐடிபிபி எனப்படும் இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையினரும் அடங்குவர். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகளை பாதுக்காக்க இவர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் அதி திறன்மிக்க கே-9 இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த மாயா, ரூபி மற்றும் பாபி ஆகிய மூன்று மோப்ப நாய்களும் பாதுபாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. நேற்று நாடு திரும்பிய இந்தியர்களுடன், இந்த நாய்களும் பத்திரமாக வந்தன.
Ashraf Ghani | அபுதாபியில் அஷ்ரப் கனி.. தஞ்சமடைந்ததாக அறிவித்தது அமீரகம்..!
பஞ்ச்குலாவில் உள்ள நாய்களுக்கான தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள், காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளாக பணியில் திறம்பட செயல்பட்டு வந்த இந்த மூன்று நாய்களும், தலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இந்திய சொத்துக்களை பாத்திரமாக பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பலசமயங்களில் அவை மூன்றும் விழிப்புணர்வுடன் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் அதிகாரிகள் நாடு திரும்பும் போது, கட்டாயமாக அந்த மூன்று நாய்களையும் அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அவை இந்தியா அழைத்து வரப்பட்டன.
காபூலில் நேற்று குஜராத் திரும்பிய இந்தியர்கள், பின்னர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் இந்த நாய்களும் சென்றது.
முன்னதாக, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது. இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
Afghan Women Protest: காபூல் சாலையில் ஆஃப்கன் பெண்கள்..தலிபான்களுக்கு எதிராக முதல் போராட்டம்!