PSLV-C59 Proba-3 Mission: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஏவும், ப்ரோபா-3 விண்கலத்தின் நோக்கம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின், ப்ரோபா-3 விண்கலம் நாளை பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, நாளை மாலை 04.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
550 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக்கோள்களை அதிக நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு சுமந்து செல்லும் பணியை தான், போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி)-சி59 மேற்கொள்ள உள்ளது. PROBA-3 பணி என்பது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) "இன்-ஆர்பிட் டெமான்ஸ்ட்ரேஷன் (IOD) பணி" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோளின் நோக்கம் என்ன?
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம், வணிக ரீதியாக மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இந்த பணியானது இரண்டு விண்கலங்களைக் கொண்டுள்ளது. அதாவது கரோனாகிராஃப் ஸ்பேஸ் கிராஃப்ட் (சிஎஸ்சி) மற்றும் ஓகல்டர் ஸ்பேஸ்கிராஃப்ட் (ஓஎஸ்சி) ஆகிய இரண்டு செயற்கைகோள்களும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கட்டமைப்பில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ப்ரோபா-3 என்பது உலகின் முதல் துல்லியமான உருவாக்கம் பறக்கும் பணி என்று ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இது சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற மற்றும் வெப்பமான அடுக்கான சூரிய கரோனாவைப் ஆராயும். இந்த செயற்கைக்கோள் Xray Polarimeter Satellite என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், செலஸ்டியல் ஆதாரங்களிடமிருந்து இருந்து எக்ஸ்ரே உமிழ்வின் துருவமுனைப்பு அளவீடுகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, அர்ப்பணிக்கப்பட்ட இஸ்ரோவின் விண்வெளி அடிப்படையிலான முதல் அறிவியல் செயற்கைக்கோள் இதுவாகும்.
பிஎஸ்எல்வி வரலாறு
பிஎஸ்எல்வி என்பது விண்வெளிக்கு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ஒரு வாகனமாகும். இது செயற்கைக்கோள்கள் மற்ற பல்வேறு பேலோடுகளை விண்வெளிக்கு அல்லது இஸ்ரோவின் தேவைகளுக்கு ஏற்ப எடுத்துச் செல்ல உதவுகிறது. இந்த ஏவுகணை வாகனம் திரவ நிலைகளுடன் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் வாகனமாகும்.
முதல் பிஎஸ்எல்வி 1994 அக்டோபரில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பிஎஸ்எல்விசி-59 விண்கலம் ஏவப்படுதலில் நான்கு நிலைகளை கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஏற்றிச் செல்லும் மொத்த எடை சுமார் 320 டன்கள் ஆகும். PSLV இன் கடைசி ஏவுதல் PSLV-C58 ஆகும். XPOSAT செயற்கைக்கோளை "ஜனவரி 1, 2024 அன்று கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில்" வெற்றிகரமாக செலுத்தியது.