ISRO PSLV-C54: விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-54..! 9 செயற்கைகோள்களுடன் பறந்தது..!

ISRO PSLV-C54: பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் 9 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணை நோக்கி குறிப்பிட்ட நேரப்படி சரியாக 11.56 மணிக்கு சீறிப் பாய்ந்தது.

Continues below advertisement

ISRO PSLV-C54: பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் 9 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணை நோக்கி குறிப்பிட்ட நேரப்படி சரியாக 11.56 மணிக்கு ஏவப்பட்டது. விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இந்த செயற்கைகோள் இந்த ஆண்டில் ஏவப்படும் 5வது செயற்கைகோள் ஆகும். மேலும், இந்த ஆண்டில் செலுத்தப்படும் கடைசி ராக்கெட் இது. மேலும், திட்டமிட்டப்படி ராக்கெட்டின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயற்கை கோள்கள் கடலின் தன்மையை கண்காணிக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

ஏற்கனவே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வளர்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிராரம்ப்(PRARAMBH)' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்த ராக்கெட்டை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

பிஎஸ்எல்வி ராக்கெட்:

 பிஎஸ்எல்வி சி-54 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மும்மரமாக தொடங்கியது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் இந்த 56வது பயணம்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நவம்பர் மாதம் 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் பாயும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்துள்ளது.  மொத்தம் நான்கு நிலைகளை கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முதல் மற்றும் மூன்றாவது உந்து நிலைகளில் திட எரிபொருளும், இரண்டு மற்றும் நான்காவது நிலைகளில் திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

செயற்கைகோள்களின் விவரங்கள்:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, 'ஓசன்சாட்03' என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் 8 நானோ செயற்கைக்கோள்களையும்  சுமந்து செல்ல உள்ளது. அவற்றில்  அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள் மட்டும் நான்கு உள்ளன. 

அதோடு, தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் ஆனந்த் ஆகிய செயற்கைக்கோள்களை, இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதோடு, சுவிட்சார்லாந்தின் ஒரு செயற்கைக்கோளும் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  

விஞ்ஞானிகளுக்கு சோம்நாத் பாராட்டு

இந்த பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்து ஒத்துழைத்த அனைத்து விஞ்ஞானிகள் அனைவரையும் பாராட்டுகிறேன் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola