ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. 3 நாட்கள் பணிக்காக 400 கிமீ சுற்றுப்பாதையில் 4 விண்வெளி வீரர்களை கொண்ட குழுவினரை அனுப்பவும் பின் இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதன் மிக முக்கிய நிலையாக கருதப்படும் விண்வெளியில் இருந்து புவிக்கும் திரும்பும் வீரர்களை, பத்திரமாக தரையிறக்கும் பணி தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்டது. 


அந்த வகையில் ககன்யான் திட்டத்திற்கான முக்கிய சோதனையை இஸ்ரோ நிகழ்த்த உள்ளது. விண்வெளி வீரர்கள் அவர்களது பயணத்திற்கு பின் பூமிக்கு திரும்பும் Integrated Air Drop Test (IADT) நிகழ்த்த உள்ளது. இந்த சோதனையின் போது சினூக் ஹெலிகாப்டர் பூமியில் இருந்து 4 முதல் 5 கிமீ தொலைவில் ஏர் டார்ப் டெஸ்ட் மேற்கொள்ளும். இந்த சோதனையின் போது, விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்புகிறார்களா என்பதை உறுதி செய்யும்.


இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரி கிறுகையில், “அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சோதனை நடத்தப்படும். முதல் ஏர் ட்ராப் சோதனை நிபந்தனைகளின் கீழ் பாராசூட் அமைப்பைச் சோதிக்க உள்ளது.  அதாவது இரண்டு பாராசூட்களும் சரியான நேரத்தில் திறக்கப்படும்போது, ​​​​விண்வெளி வீரர்களின் ஸ்பிளாஷ் டவுன் செயல்முறையைப் பிரதிபலிக்கும்," என்று தெரிவித்துள்ளார்.


மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் இருக்கும் தொகுதியான குழு தொகுதியின் ஸ்பிளாஷ் டவுனுக்குப் பிறகு, மற்றொரு ஹெலிகாப்டர் குழு தொகுதியைக் கண்டுபிடிக்கும். அதன்பிறகு கடற்படையினர், விண்வெளி வீரர்களை மீட்டு சென்னை கடற்கரைக்கு கொண்டு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் இந்த சோதனை மிகவும் முக்கியமானது ஆகும். கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது crew module எனப்படும் விண்வெளி வீரர்கள் இருக்கும் தொகுதி தலைகீழாக மாறியது. என்வே இம்முறை அது சரி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  


இதற்காக வடிவமக்கப்படும் ராக்கெட்டில் 3 நிலைகள் இருக்கும். அதில் மையப்பகுதியில் தான் ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் விண்கலம் தனது பயணத்த தொடங்கியதுமே, எதிர்பாராத விதமாக ஏதேனும் கோளாறு கண்டறியப்பட்டால் உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் இருக்ககும் எஸ்கேப் சிஸ்டம் மட்டும் தானாகவே உடனடியாகெ வெளியேறும். அதிலிருந்து க்ரூ மாட்யூல் தனியாக பிரிந்து, பாராசூட் உதவியுடன் இந்திய பெருங்கடலில் தரையிறங்க வேண்டும். ககன்யான் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல முக்கிய சோதனைகள்  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.