தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது.
ரயில் சேவை:
இந்தியாவின் மிகப்பெரிய பொது போக்குவரத்து நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த இணையதளம் மூலம் பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மடிக்கணினிகள் வாயிலாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் இந்த இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துகொள்ளலாம். இந்த வசதி ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கிறது. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இணையதளம் முடக்கம்:
இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக பயன்படுத்தப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இன்று காலை முதலே முடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் என IRCTC நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. மேலும், டிக்கெட் ரத்து மற்றும் பயணத்தை தவற விட்டவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் , தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை அமேசான் (Amazon), மேக் மை டிரிப் (Make My Trip), உள்ளிட்ட மாற்று இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தொழில்நுட்ப பிரச்சனையை விரைந்து சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இணையதளம் சீரானது:
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வந்த நிலையில், தற்போது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது.
மேலும் படிக்க