ரயிலில் பயணம் செய்யும்போது உடன் எடுத்துச் செல்லும் அதிகப்படியான  லக்கேஜ்களால் உங்களின் பயணத்தின் மகிழ்ச்சி பாதியாக குறைந்துவிடும் என ரயில்வே அமைச்சரகத்தின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இனி பயணத்தின்போது எடுத்துச் செல்லப்படும் லக்கேஜ்களின் கூடுதல் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


 






கட்டண விவரம்..


பயணத்தின்போது எடுத்துச் செல்லப்படும் லக்கேஜ்களின் அளவு பயணிகள் பயணம் செய்யும் வகுப்புகளைப் பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, விமானங்களில் லக்கேஜ்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இனி ரயில்களிலும் பின்பற்றப்படவுள்ளது. ஏ.சி முதல் வகுப்பில் பயணம்   செய்பவர்கள் 70கிலோ வரையிலும், ஏ.சி இரணடாம்  வகுப்பில் பயணம் செய்பவர்கள் 50கிலோ வரையிலும், ஏ.சி மூன்றாம் வகுப்பிலும், ஸ்லீப்பர் வகுப்பிலும் பயணம் செய்பவர்கள் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 35 கிலோ வரையிலும் எடுத்துச் செல்லலாம்.  லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.


மேலே குறிப்பிட்ட அளவோடு ஏ.சி முதல் வகுப்பில் பயணம்  செய்பவர்கள் 150 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை ரூபாய் முற்பது கட்டணமாகச் செலுத்தி தங்களுடன் எடுத்துச் செல்லலாம். ஏ.சி 2டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட அளவோடு 100 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை தங்களுடன் கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம்.  ஸ்லீப்பர் மற்றும் ஏ.சி 3 டயர் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 80 கிலோ வரையிலும் கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 70 கிலோ வரையிலும் கட்டணம் செலுத்தி உடன் எடுத்துச் செல்லலாம்.  


புக்கிங்..


இந்த கூடுதல் லக்கேஜ்க்கான புக்கிங்கை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் புக்கிங் செய்துகொல்லலாம் எனவும் இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. புக்கிங் செய்யாமல் கொண்டு செல்லப்படும் லக்கேஜ்களுக்கு சாதாரண கட்டணத்தினைவிட 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்யும்போது கூறிய அளவைவிட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச்சென்றால் 1.5 மடங்கு அதிகப்படியான கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இதுபோன்ற லக்கேஜ்களுக்கான கட்டணமுறை ஏற்கனவே தேஜஸ் போன்ற தனியார் ரயில்களில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.