இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. தினமும் பலர் இந்த சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் ஆர்டர் செய்த காஃபியில் சிக்கன் துண்டு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடந்தது என்ன?


டெல்லியைச் சேர்ந்த சுமித் சவுரப் என்ற நபர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “சோமேட்டோ செயலி மூலம் காஃபி ஒன்றை ஆர்டர் செய்தேன். அந்த காஃபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது. இன்றுடன் உங்களுக்கும் எனுக்குமான தொடர்பு முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார். 


 






சோமேட்டோவின் பதில்:


 


இதற்கு சோமேட்டோ நிறுவனம் சார்பில் ஒரு பதில் விளக்கமும் அளிக்கைப்பட்டுள்ளது. அதையும் அந்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய ப்ரோ வாடிக்கையாளர் வசதியை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதை பதிவிட்டு அவர் இப்படி ஒரு தவறை செய்துவிட்டு நீங்கள் என்னுடைய மதிப்பை நீங்கள் பெற முடியாது எனப் பதிவிட்டுள்ளார். 


 






காஃபி கடையின் விளக்கம்:


இந்த சம்பவம் தொடர்பாக காஃபி கடை ஒரு பதில் பதிவை செய்துள்ளது. அதில், “சுமித் இந்த தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம். உங்களுடைய விவரங்களை அனுப்புங்கள் எங்களுடைய குழு உங்களை தொடர்பு கொள்ளும்” எனப் பதிவிட்டுள்ளது. 


 






இந்த விவகாரம் ட்விட்டர் வாசிகள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண