Iran Israel Conflict: ஈரான் இஸ்ரேல் போர் உக்கிரம் அடைந்துள்ளது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தற்போது அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளது. ஈரானின் முக்கிய இடங்களில் அமெரிக்கா திடீரென தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மட்டுமின்றி பல பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்:
கச்சா எண்ணெய்:
இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படும் பொருளாக கச்சா எண்ணெய் உள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் ஈரான் முக்கிய பங்கு வகிக்கிறது.
வேதிப்பொருட்கள்:
தொழிற்சாலைகளில் பெருவாரியாக பயன்படுத்தப்படும் அசிக்லிக் ஆல்கஹால் ஈரானில் இருந்தே இந்தியாவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியம் கோக் ஈரானில் இருந்தே அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது.
நட்ஸ்:
பாதம் மற்றும் பிஸ்தா இந்தியாவிற்கு அதிகளவில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், பேரீட்சையும், குங்குமப்பூவும் இந்தியாவிற்கு அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
விலையுயர்ந்த கற்கள், முத்துகள்:
ஈரானில் இருந்து இந்தியாவிற்கு விலையுயர்ந்த முத்துகளும், பவளங்களும் இறக்குமதி செய்யப்படுகிறது.
மேற்கொண்ட பொருட்கள் இந்தியாவிற்கு ஈரானில் இருந்து இறக்குமதி செயயப்படுகிறது. தற்போது போர் நடந்து வருவதால் இந்த பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பொருட்களின் விலை இந்தியாவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி:
அதேசமயம், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வேளாண் விளைபாெருட்களான அரிசி, தேயிலை, சர்க்கரை, பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இயந்திரங்கள், உலோகங்கள், மருந்து பொருட்களும் ஈரானுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், பாலிஸ்டர், ரப்பர் பொருட்களும் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது ஈரான் மீது நடந்து வரும் தாக்குதலால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் ஆயிரக்கணக்கான கோடிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ? என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் போரால் இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனென்றால், இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்தும், ஈரான் வழியாகவுமே வருகிறது. தற்போது ஈரான் ஹார்மூஸ் நீர்வழித்தடத்தை ஈரான் மூடும் அபாயமும் உண்டாகியிருப்பதால் இந்தியாவில் விலைவாசி உயர்வு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தகம்:
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளின் வர்த்தகத்தை ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா வலுவான ஆதரவுடன் இருப்பதால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிரமம் அதிகமாக உள்ளது.
அதேசமயம், உலக வர்த்தகம், பங்குச்சந்தையில் இந்த போர் தாக்கம் மிக கடுமையாக எதிராெலித்து வருவதால் இதை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.