மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு

இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு மதுரை பாண்டிகோயில் திடலில் இன்று (ஜூன் 22) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்டை மாநிலங்களில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். கந்தசஷ்டி கவசத்துடன் தொடங்கும் மாநாட்டில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

பாமகவினர் உண்ணாவிரத போராட்டம்

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒற்றுமையாக இணைந்து கட்சியை வழிநடத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த பாமகவினர். தைலாபுரத்தில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்:

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் சிறப்பு வீடியோவும் வெளியிட்டுள்ளது.

5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவனை தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்த முயற்சித்து கல்லால் அடித்துக் கொலை. பீகாரை சேர்ந்த தம்பதியின் 5 வயது மகனை அடித்துக் கொலை செய்ததாக அசாம் இளைஞர் கைது; சிறுவனுடன் இளைஞர் ஒருவர் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவானதை அடுத்து போலீசார் நடவடிக்கை

குறைந்த விலையில் ரீசார்ஜ்

ரூ.11க்கு 10GB Dataவை பயன்படுத்தும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது ஜியோ, ஏர்டெல். ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் இத்திட்டம், குறுகிய நேர பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என நிறுவனங்கள் தெரிவிப்பு.

ஐபோன் 17 சீரிஸ் ரெடி..

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் செப்டம்பரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மாடலகளை காட்டிலும் மிகவும் மெலிதானது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் 17 சீரிஸில் இடம்பெற உள்ளன.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும். உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான்தான். அந்நாட்டில் மேலும் சில இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முயலவேண்டும்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரை

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் - ஈரான்

“அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் " நடத்துவோம்” என ஈரான் பகிரங்க எச்சரிக்கை. அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் விளக்கம்

“ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் கவலையளிக்கிறது”

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; அமெரிக்க தாக்குதல் கவலையளிக்கிறது; ராணுவம் மூலம் தீர்வு கிடைக்காது; பேச்சுவார்த்தைதான் முன்னோக்கி எடுத்துச் செல்லும் -ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்

பும்ரா படைத்த சாதனை:

SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியஆசிய பந்துவீச்சாளர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்தார் பும்ரா. 146 விக்கெட்டுகள் எடுத்து முன்னிலையில் இருந்த வாசிம் அக்ரமின் சாதனையை, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா (147 விக்கெட்டுகள்) முறியடித்துள்ளார்.