இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala) உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.


ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் இன்று அதிகாலை மும்பையில் உள்ள  கேண்டி பிரிச் மருத்துவமனைக்கு ( Candy Breach Hospital) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக  Candy Breach Hospital தலைமை செயல் அதிகாரி என்.சந்தானம் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். 






பிபரல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஹங்கமா மீடியாவின் தலைவராகவும் ( Hungama Media and Aptech), Viceroy Hotels, Concord Biotech, Provogue India, and Geojit Financial Services உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


பிரதமர் இரங்கல்:


தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 






பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நிதி மற்றும் வணிக துறைக்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவருடயை அறிவார்ந்த திட்டமிட்ட செயல்பாடுகளும், சிந்தனைகளும் ஈடு இணையற்றவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  நாட்டின் வளர்ச்சியின் மீது பெரும் அக்கறை கொண்டிருந்ததாகவும், அவருடைய மறைவு வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


யார் இவர்?


வணிகர் மற்றும் பட்டயக் கணக்காளர் (CA), மற்றும் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அவர், ஆகாசா ஏர் வெளியீட்டு விழாவில் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு $5.8 பில்லியன் ஆகும். முதலீடுகளை தனது முதன்மையான வருமான ஆதாரமாக கொண்டு சுயமாக உருவாக்கியவர். ஜுன்ஜுன்வாலா ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண