நதிகள் என்றும் எல்லா உயிர்களின் வாழ்விலும் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. நமது வாழ்வில் நதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14-ஆம் தேதி அன்று நதிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்காக சர்வதேச அளவில் ஒரு தினம் (International Day of Action for Rivers)கொண்டாடப்படுகிறது. நதிகளில் சுத்தமாக பராமரிப்பது, அழியும் நதிகளை மீட்டெடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாளின் நோக்கம்
இது சர்வதேச நதிகள் அமைப்பு (International Rivers organisation ) என்ற சமூக அக்கறையுள்ள நிறுவனத்தின் முன்னெடுப்பு. இது தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மனித நடவடிக்கைகளால் நதிகள் போன்ற நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு கடுமையாக மாசுபடுகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக International Day of Action for Rivers நாள் உருவாக்கப்பட்டது.
சர்வதேச நதிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, நதிகளுக்கான சர்வதேச நாள் முதல் மார்ச் 1997-ஆம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரேசிலில் உள்ள குரிடாபாவில் நடைபெற்ற International Day of Action Against Dams and For Rivers முதல் சர்வதேச கூட்டத்தில், அணைகள் மற்றும் நதிகள், நீர் மற்றும் வாழ்க்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தினம் 20 நாடுகளின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரிய அணைகளுக்கு எதிரான பிரேசிலின் நடவடிக்கை தினம் மார்ச் 14 அன்று முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து,சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நதிகள் மனித உயிர்களை எவ்வாறு தக்கவைக்கின்றன என்பதைப் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாக இது இருந்து வருகிறது. நவீனமயமாக்கல், மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் இந்த நீர்நிலைகளை எவ்வாறு மாசடைய செய்கின்றன என்பது பற்றியும் இது பேசுகிறது. ஆறுகள் போன்ற நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஆதாரமாக உள்ளன.
அதிகப்படியான கட்டுமான வளர்ச்சி, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுநீரை ஆறுகளில் கொட்டுவதால் இந்த நீர்நிலைகள் மாசுபடுகின்றன. இதனால் அவற்றை நம்பியிருக்கும் உயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பூமியின் நிலையான வளர்ச்சிக்கு, நதிகள் அழிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம்.
இந்த உயிரியல் சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இந்த ஆண்டு, ’பல்லுயிர் பெருக்கத்திற்கு நதிகளின் முக்கியத்துவம்’ (the importance of rivers to biodiversity.) என்ற கருப்பொருளுடன் கொண்டாப்படுகிறது.
இந்நாளில், உலக அளவில் நதிகளை சுத்தப்படுத்துதல், ஆறுகளைக் காக்க என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல தன்னார்வ செயல்பாடுகள் நடத்தப்படுக்கின்றன.