டிஜிட்டல் மயம் என்பதை , இன்று நாம் அனுபவித்திக் கொண்டிருக்கிறோம். ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட யூபிஐ முறை, தற்போது ரோட்டோ ட்ரை சைக்கிள் இளநீர் கடை வரை வந்துவிட்டது. ஒரு செல்போன் இருந்தால் போதும், எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வாங்கலாம். சில்லரை பிரச்சனை இல்லை, பர்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை, பையில் பணம் இருக்க வேண்டியதில்லை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டியதில்லை; வெறுமனே மொபைல் போனை வைத்துக் கொண்டு எல்லா இடத்திற்கும் ஷாப்பிங் சென்று கொண்டிருக்கும் முழு டிஜிட்டல் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 




இதையெல்லாம் எளிமையாக்கிய பெருமை, போன் பே, கூகுள் பே, பாரத் பே போன்ற யூபிஐ நிறுவனங்களையே சேரும். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதை சார்ந்தவர்களுக்கு லாபமும் அதிகரிக்கும் தானே . அந்த வகையில் பாரத் பே நிறுவனமும் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. வளர்ச்சியோடு, இப்போது புதிய சர்சையிலும் சிக்கியிருக்கிறார் பாரத் பே நிறுவனத்தின் இணை நிறுவனர் அஹ்னீர் குரோவர். நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது மட்டுமல்லாது, அவரது மனைவி மாதுரி ஜெயின் குரோவர் மீதும் இந்த குற்றச்சாட்டு எழுந்து, அவரது பங்குகள் முடக்கப்பட்டன. 


இதையெடுத்து நிறுவனத்திலிருந்து அஷ்னீர் குரோவர் வெளியேறினார். இதற்கிடையில் தான் அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மிக அதிகபட்ச சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், அதன் உச்சமாக அவரது வீட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள டைனிங் டேபிள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் தான் அஷ்னீர் குரோவர் குடும்பம் உணவருந்தி வந்ததாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்தது. 


இது தொடர்பாக பல புகைப்படங்களும் பகிரப்பட்டன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்து, அஷ்னீர் குரோவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 






‛இதை படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு தகவலை பரப்புகின்றனர். அதை நம்பி ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றனர். இவ்வளவு விலை அதிகமாக ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, அந்த தொகையை வைத்து தொழிலில் முதலீடு செய்திருப்பேன். அது எனக்கு மட்டுமல்லாமல், இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உதவியிருக்கும். அவர்கள் இன்னும் நல்ல உணவு உண்டிருப்பார்கள்,’ என்று தனது ட்விட்டர் பதிவில் அஷ்னீர் குரோவர் கூறியுள்ளார். அத்தோடு அவர் அந்த சர்ச்சைக்குரிய டைனிங் டேபிள் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண