மேற்கு வங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் மற்றொருவர் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பானிஹாட்டி நகராட்சியின் டிஎம்சி கவுன்சிலரான அனுபம் தத்தா, ஞாயிற்றுக்கிழமை மாலை பனிஹாட்டியில் இருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோக்காட்சி தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து பாரக்பூர் போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மா தெரிவிக்கையில், “நாங்கள் இந்த சம்பவம் குறித்து  விசாரித்து வருகிறோம். எங்களிடம் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி விரைவில் கொலை செய்தவர் மற்றும் கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.


இந்த கொலையின் பின்னணியில் உள்ளூர் பாஜக எம்பி அர்ஜூன் சிங் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. “பாஜகவை சேர்ந்த எம்பி அர்ஜுன் சிங்தான் இந்த கொலைக்குப் பின்னால் இருக்கிறார். இன்று நாம் நமது தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளோம். இந்த கொலையை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு காவல்துறையை நான் வலியுறுத்துகிறேன்" என்று டிஎம்சி தலைவர் பார்த்தா பௌமிக் கூறினார்.


இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாஜக, இந்த கொலைக்கு டிஎம்சியில் உள்ள உள் பகையே காரணம் என்று குற்றம் சாட்டியது. “பனிஹாட்டி நகராட்சியை டிஎம்சி வென்றது. அங்கு பாஜக முன்னிலையில் இல்லை. இந்த சம்பவம் அவர்களின் உள் சண்டையின் விளைவாகும். இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறினார்.


அதேபோல், புருலியா மாவட்டத்தின் ஜல்தா நகராட்சியில், நான்கு முறை காங்கிரஸ் உள்ளூர் கவுன்சிலராக இருந்த தபன் காண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்டை மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண