அருவெறுக்கத்தக்க வகையில் சீனியர்கள் தங்களிடம் ராக்கிங்கில் ஈடுபடுவதாக எம்ஜிஎம் மெடிக்கல் காலேஜின் முதலாமாண்டு மாணவர்கள் UGCக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர்


'நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்’ என்று சினிமாவில் பாட்டுவரி வைக்கலாமே தவிர ராக்கிங் என்பதால் எந்த விதத்திலும் பயனும் இல்லை. அது ஆரோக்கியமானதும் இல்லை. ராக்கிங்கால் பல மாணவர்கள் தங்களது உயிரை பலி கொடுத்துள்ளனர். பல கல்லூரிகளைவிட்டு மாணவர்கள் வெளியேற ராக்கிங் என்பது காரணமாகவும் இருந்துள்ளது. அதனால் காலம்காலமாக வழக்கமாக இருந்த ராக்கிங் என்பதை கல்லூரி நிர்வாகங்களும், அரசும் தீவிரமாக எதிர்த்தன. தற்போது பல கல்லூரிகளில் ராக்கிங் என்பது இல்லை என்றாலும் சில கல்லூரிகளில் தொடர்ந்தே வருகின்றன. அப்படியான ஒரு கொடூர ராக்கிங் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது




இந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஎம் மெடிக்கல் காலேஜில் சீனியர்கள் தங்களிடம் அருவெறுக்கத்தக்க வகையில் ராக்கிங்கில் ஈடுபடுவதாக முதலாமாண்டு மாணவர்கள் UGCக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஆடியோ ரெக்கார்டிங், புகைப்படங்கள் எந்த இடத்தில் உள்ள சீனியர்கள் ராக்கிங் செய்கிறார்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள்  UGCன் ராக்கிங் தடுப்புக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராக்கிங் என்ற பெயரில் டார்ச்சர் செய்வதாகவும் ஒருவரையொருவர் மாறிமாறி கன்னத்தில் அறைந்துக்கொள்ள வேண்டுமென்றும் அது சத்தமாக இருக்க வேண்டுமென்றும் சீனியர்கள் சொல்வதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஆண்கள் பெண்களிடத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் பேச வேண்டும், தலையணையுடன் உடலுறுவு கொள்ள வேண்டும் போன்ற கொடூர கட்டளைகளை விதிப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.


Crime: கடற்கரையில் காணாமல்போன மனைவி.. கதறிய கணவர்.. தீவிரமாக தேடிய அதிகாரிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்


மாணவர்களின் இந்த புகாரை UGC உடனடியாக ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் இந்த விவகாரம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ராக்கிங் விவகாரங்கள் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு விவரம் தெரிந்தும் கல்லூரி கண்டுகொள்ளவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


50 கோடி ரூபாய் பணம்...5 கிலோ தங்கம்...அமைச்சர் வீட்டில் கொத்து கொத்தாக சிக்கிய பணம்...நாட்டை உலுக்கும் பண மோசடி வழக்கு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண