உத்தரபிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மசாஜ் செய்யவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


மசாஜ் செய்யச்சொன்ன ஆசிரியை


பள்ளிகளில் நடக்கும் பிரச்சனைகள் அதிகரித்துவரும் இந்த காலத்தில், மாணவர்கள் பலர் அதன் மூலம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 



மசாஜ் செய்யும் விடியோ


அந்த வீடியோவில் மாணவர்களை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை ஊர்மிளா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த பள்ளியின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வைரலான இந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்யும்போது அவர் நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்தச் செயலின்போது மற்ற மாணவர்களும் வகுப்பறையில் இருப்பதும், வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


தொடர்புடைய செய்திகள்: Vijay Sethupathi : "என் வாழ்க்கையிலயும் ஒரு ஜானு இருந்தாங்க...." : ஃப்ளாஷ்பேக் சொல்லி உருகிய விஜய் சேதுபதி..


கல்வி அதிகாரி நடவடிக்கை


இது குறித்து பேசிய ஹர்டோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங், "இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் காண நேர்ந்தது. முதல் பார்வையில், ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். அவரது இடைநீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன,” என்று கூறியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. ஆசிரியர் மீது முறையான புகார் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






பெற்றோர்கள் கருத்து


அந்த வகுப்பில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது, இந்த ஆசிரியரை பற்றி நல்ல அபிப்பிராயங்கள் இல்லை என்ற தகவலும் வந்துள்ளது. ஏற்கனவே இதுபோலத்தான் அவரை குறித்து தங்களது பிள்ளைகள் புகார் கூறுவார்கள் என்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையே முதல் நடவடிக்கை என்று கூறினார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.