இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில் கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்வகையில் ஐஎன்எஸ் வகிர் கப்பல் இன்று அர்ப்பணிக்கப்பட்டது. 






இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. 






இந்த சூழலில் கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. 


அதாவது, INS கல்வாரி, INS காந்தேரி, INS கரன்ஜ், INS மற்றும் INS வேலா ஆகிய நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டுமானம் முடிந்து இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த வரிசையில் ஐஎன்எஸ் வகிர் 5வது கப்பலாகும். இதில் 6வது நீர்மூழ்கிக்கப்பல் வக்ஸீர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நிறைவடைந்தபின் விரைவில் படையில் சேர்க்கப்படும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கிக் கப்பல், நீருக்கு அடியில் எதிரிநாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் வலிமை கொண்டது. ஏவுகணையை நீருக்கு அடியிலும், வானிலும் ஏவ முடியும். 


இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் கடற்படையில் இணைக்கப்படும்.