ஜீராவான் எனப்படும் மசாலா பவுடரை விமானத்தில் கைப்பையில் (ஹேண்ட் லக்கேஜில்) எடுத்துச் செல்ல தடை விதிகப்பட்டுள்ளது. இதனால் ஜீராவான் மசாலாவின் பிறப்பிடமான இந்தூர்வாசிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.


ஜீராவான் எனப்படுவது சிவப்பு மிளகாய்தூளில் செய்யப்படுவதால் அது பயணிகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தூரின் தேவி அஹில்யாபாய் விமானநிலையத்தில் இதறன அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.


அது குறித்து இந்தூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரும் அடிக்கடி விமாபப்பயணம் மேற்கொள்பவருமான சமீரா சர்மா கூறியதாவது: நான் தேவி அஹில்பாய் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் புதிதாக ஒரு பொருள் தடை செய்யப்பட்டது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.


காரணம் ஜீராவான் பொடியை விமானத்தில் கைப்பையில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜீராவான் என்பது சீரகம், வரமல்லி, சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, சிவப்பு மிளகாய், பெருங்காயன், மஞ்சள்தூள், உப்பு, மாங்காய் பொடி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது சுவைகூட்டியாக இருக்கிறது. கூடவே குளிர்காலங்களில் உடலின் வெப்பத்தைப் பேண உதவுகிறது. எந்தக் காலத்திலும் அஜீரணக் கோளாறை சரி செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட பொருளை ஏன் தடை செய்ய வேண்டும் என்று இந்தூர் வாசியான சமீரா கேள்வி எழுப்பியுள்ளார்.


பொதுவாக விமானத்தில் பயணிகள் எடுத்துச் செல்லும் கைப்பையில் கத்தி, பிஸ்டல், கத்தரிக்கோல், ஸ்க்ரூ ட்ரைவர், சுத்தியல் போன்ற ஆயுதங்களுக்கு தடை உள்ளது. பெப்பர் ஸ்ப்ரே போன்ற பொருட்களும் இதில் அடங்கும். இந்நிலையில் மசாலா பொருளான ஜீராவான் மீதான தடை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



 


ஜீராவான் பவுடரை இப்படி வீட்டிலேயே செய்து பாருங்கள். சுவையும் மணமும் அள்ளும்.