தமிழ்நாடு :
- சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - தமிழ்நாட்டுக்கும், சதுரங்கத்துக்கும் நீண்ட வரலாறு உள்ளதாக விழாவில் உரை
- தமிழ்நாடு தான் இந்தியாவின் செஸ் தலைநகரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - 4 மாதங்களிலேயே செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பேச்சு
- தமிழரின் தொன்மையையும், கடல் கடந்து கொடி நாட்டிய தீரத்தையும் விவரித்த பண்ணாட்டு நிகழ்த்து கலை - பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும், பண்பாட்டையும் நடிகர் கமல்ஹாசன் குரலில் காட்சி மொழியாக்கிய கலைஞர்கள்
- செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் இப்போது கிடையாது - பிரதமர் மோடியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
- தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரிசோதனை நிறைவு - கணக்கில் வராத பணம் ரூ.150 கோடிக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்தியா :
- ராஜஸ்தானில் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானிகள் உடல் கருகி பலி
- நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேச்சு - பாஜக எம்.பி.க்கள் அமளியாஅல் இரு அவைகளும் ஒத்திவைப்பு
- மாநிலங்களவையில் மேலும் 3 எம்.பி.க்கள் இடை நீக்கம் - மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
- முழுவதும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
- காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விவகாரத்தில் சோனியா காந்தியுடன் மோதல்: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம்
உலகம் :
- கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது
- சக கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவருக்கு மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்ப எகிப்து கோர்ட்டு அறிவுறுத்தல்
- இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028 ஆம் ஆண்டு வரை ரஷியா நீடிக்கும் என நாசா தகவல்
விளையாட்டு :
- செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் நாள் ஆட்டங்கள் இன்று தொடக்கம் - இந்தியாவின் ஏ அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது
- 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் தொடக்கம் - இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல் - காஷ்மீர் வழியாக இந்தியா நடத்திய ஜோதி ஓட்டத்தை வாபஸ் பெற்றது காரணம் என விளக்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்