இந்தியாவை சேர்ந்த 92 வயது ரீனா சிபார், தனது மூதாதையர் வீட்டிற்குச் செல்வதற்காக சனிக்கிழமையன்று பாகிஸ்தான் சென்றுள்ளார். நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் தூதரகம் அந்தப் பெண்ணுக்கு மூன்று மாத விசாவை வழங்கியுள்ளது. இதுகுறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் செய்தி வெளியாகி உள்ளது.


 






பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பிரேம் நிவாஸில் அமைந்துள்ள தனது மூதாதையர் வீட்டைப் பார்ப்பதற்காக அந்த பெண் சனிக்கிழமை வாகா-அட்டாரி எல்லை வழியாகச் சென்றார். "வந்து செல்வதற்கு ஏதுவாக விசா கட்டுப்பாடுகளை தளர்த்த இரு நாடுகளின் அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தி இருந்தார்.


இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, ராவல்பிண்டியில் பன்முக கலாச்சாரம் செழித்து ஓங்கியதாகவும் பின்னர், ராவல்பிண்டியின் எல்லை பகுதிக்கு விரட்டப்பட்டதாகவும் ரீனா நினைவு கூர்ந்தார்.


இதுகுறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனுக்கு அவர் அளித்த பேட்டியில், "எனது சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். எங்கள் வீட்டில் பல்வேறு சமூக மக்கள் வேலை செய்தனர்" என்றார்.


1947இல், பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. அந்த நேரத்தில் அவருக்கு வயது 15. இதுகுறித்து விவரித்த ரீனா, "என் மூதாதையர் வீடு, அக்கம் பக்கம், தெருக்கள் ஆகியவற்றை என் இதயத்திலிருந்து அகற்ற முடியவில்லை" என்றார்.


 






1965 இல் பாகிஸ்தானுக்குச் செல்ல விசாவிற்காக ரீனா விண்ணப்பித்ததாகவும், ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக அதிக பதட்டங்களுக்கு மத்தியில் அவரால் அனுமதி பெற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண