குஜராத் கிர் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட சிங்கத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிர் தேசிய பூங்கா:
இந்தியாவின் முக்கிய வனவிலங்கு பூங்காக்களில் ஒன்றுதான் கிர் தேசிய பூங்கா. இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு வகை வகையான சிங்கங்களையும் புலிகளையும் பார்க்க முடியும். இந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஹர்திக் ஷெலாட் என்பவர் கிர் வனவிலங்கு பூங்காவில் , ஆசிய சிங்கம் ஒன்று தண்ணீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் ஜூன் 2 ஆம் தேதி ஹர்திக் பூங்காவிற்கு சென்றபொழுது எடுத்துள்ளார். கோடை வெப்பத்தை தணிக்க , குட்டையில் சிங்கம் நீர் குடிக்கிறது.மண்டியிட்டு, தண்ணீர் குடிப்பதற்காக நாக்கை நீட்டிக்கொண்டிருப்பதை புகைப்படம் காட்டுகிறது. கேமராவின் திசையில் பார்க்கும்போது அதன் மீசையில் நீர்த்துளிகள் சொட்டுகின்றன. அதன் வலது கண்ணுக்கு அருகில் ஒரு புதிய காயம் உள்ளது.
ஹர்திக் ஷெலாட் கூறியதாவது :
”நாங்கள் காலையில் தேசிய பூங்காவிற்குச் சென்றோம். இரண்டு மணி நேரம் சுற்றித் திரிந்த பிறகு, நாங்கள் நீர்நிலையை அடைந்தோம், சிங்கங்கள் வந்து தண்ணீர் குடிக்கும் வரை காத்திருந்தோம். நாங்கள் மதியம் திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் நாங்கள் மீண்டும் மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருந்து பின்னர் திரும்பி வந்தோம். இறுதியாகத்தான் சிங்கம் தண்ணீர் குடிக்க வந்தது.சிங்கம் தண்ணீர் குடிப்பதை புகைப்படம் எடுப்பது அரிது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற புகைப்படத்தை நான் எடுத்தேன், ஆனால் அது மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலையில் கிளிக் செய்யப்பட்டது. . சிங்கம் இயற்கையான நீர்நிலையிலிருந்து தண்ணீரைக் குடித்து, அதன் நாக்கை வெளியே எடுத்துக்கொண்டு, கேமராவை வெறித்துப் பார்க்கும் இந்த துல்லியமான போஸைக் கிளிக் செய்வது ஒரு கனவாக இருந்ததுபழைய படம் குளிர்காலத்தில் க்ளிக் செய்யப்பட்டது. அப்போது வெளிச்சம் குறைவாக இருந்ததால் குளிர்கால வானிலை சவாலாக இருந்தது” என்றார். சிங்கத்தின் முகத்தில் ஏற்பட்ட காயத்தைப் பற்றி ஷெலாட் கூறிய போது அது இரண்டு சிங்கங்கள் சண்டையிட்டதால் ஏற்பட்ட காயம் என தெரிவித்தார்.