#BoycottMyntra மற்றும் #UininstallMyntra என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக தொடங்கி இருக்கிறது, இது இதற்குமுன்பு இதே போல பல ப்ராண்டுகளுக்கு பல முறை நடந்துள்ளது என்றாலும், மிந்த்ரா 2016 ல் செய்த அதே காரணத்திற்காகவே இம்முறையும் எதிர்ப்பை சந்திக்கிறது. 



'ஸ்க்ரோல் ட்ரோல்' என்ற நிறுவனம் ஈ-காமர்ஸ் ஷாப்பிங்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்ட பிறகு கொந்தளித்த இந்துத்துவ ஆதரவாளர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், அந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.


மிந்த்ரா மகாபாரதத்தின் ஒரு காட்சியை சித்தரித்து ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் திரௌவுபதியின் சேலையை துச்சாதனன் அவிழ்ப்பது போலவும். மிந்த்ரா ஆப்பில் கிருஷ்ணர் 'extra long sareer' என்று புடவைகளைத் தேடுவதாகவும் கிராஃபிக்ஸில் வரைந்திருக்கிறார்கள். இந்த விளம்பரம் வித்யாசத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் செய்யப்பட்டிருந்தாலும், அது பலரிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது - இந்து மதக் காவியத்திலிருந்து காட்சியை கேலி செய்ததற்காக அவர்கள் கிராஃபிக்கை நெட்டிசன்கள் தாக்கினர், இது மதத்தை அவதூறு செய்வதாகும் என்று கமெண்ட் செய்து எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.


2016 ஆம் ஆண்டில் அதே காரணத்திற்காக மக்கள் ஆப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மீண்டும் அதே வேலையை செய்வதாக இந்துத்துவ ஆதரவாளர்கள் கூறுகின்றனர். "நீங்கள் வருவதற்கு முன்பு இந்துத்துவா இங்கே இருக்கிறது, நீங்கள் வெளியேறிய பிறகும் இங்கே இருக்கும் .. இந்துக்கள் இன்று விழித்திருக்கிறார்கள்" என்று ஈஸ்வர் பொன்னனா ட்வீட் செய்திருக்கிறார்.



2016 ல், அதே காரணங்களுக்காக இந்த ஹேஷ்டேக் வைரலானபோது, ​​மிந்த்ரா ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தனர். விளம்பரத்தை அவர்கள் உருவாக்கவும் இல்லை, அதை அவர்கள் அதை எந்த வகையிலும் அங்கீகரிக்கவும் இல்லை என்று கூறி, மிந்த்ரா தனது அறிக்கையில், அவர்களது பிராண்டைப் பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டிருந்தனர். "இந்த படைப்பு எங்களுக்கு தெரியாமல் ,எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மூன்றாம் தரப்பு (ஸ்க்ரோல் ரோல்) செய்து வெளியிட்டது." என்று ட்வீட் செய்திருந்தனர்.


அப்போது அதை உருவாக்கிய 'ஸ்க்ரோல் ட்ரோல்' போஸ்டரை நீக்கி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. "மைந்த்ராவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த இடத்திலும் தொடர்பு இல்லை" என்றும் அவர்கள் அப்போது தெளிவுபடுத்தியிருந்தனர். அந்த சூழ்நிலைகாண பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அதே போஸ்டர் இம்முறையும் ஸ்க்ரோல் ட்ரோலுக்கே தெரியாமல் மீண்டும் பகிர்வாகி உள்ளது. அதற்கு அவர்கள் ஜன்மாஷ்டமியின் காரணமாக மீண்டும் வந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருக்கின்றனர்.


இருப்பினும், அப்போது தொடங்கிய ‘புறக்கணிப்பு’, ட்விட்டரில் முழுவதும் வைரலாக இருந்தது. மேலும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதைக்கண்டு இந்துத்துவவாதிகள் கோபம் கொண்டுள்ளனர். இன்று காலை முதல் பலர் மிந்த்ரா ஆப்பை தங்கள் மொபைலில் இருந்து நீக்க தொடங்கிவிட்டனர், ஆப் ஸ்டோர்களில், ரேட்டிங் ஐந்துக்கு 1 ஸ்டார் கொடுத்து, அன் இன்ஸ்ட்டால் செய்வதற்கான காரணமாக 'இந்து-விரோத உணர்வு' என்று குறிப்பிட்டுள்ளனர்.


சர்ஃப் எக்செல், தனிஷ்க், கேரளா சுற்றுலா மற்றும் பல விளம்பரங்களும் மத உணர்வுகளை புண்படுத்தும் சர்ச்சையில் சிக்கியயது குறிப்பிடத்தக்கது