செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகம் அதன் ஒரு அத்தியாயத்தில் வரதட்சணையின் சிறப்புகளை பட்டியலிட்டதால் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.இந்திராணி எழுதிய 'செவிலியர்களுக்கான சமூகவியல் பாடநூல்' என்ற பாடப்புத்தகத்தில் வரதட்சணை ஏன் பலன் தருகிறது என்பதற்கான குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.





வரதட்சணை ஒரு புதிய குடும்பத்தை நிறுவுவதற்கு எவ்வாறு உதவுகிறது மற்றும் ஒரு வீட்டில் உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் துணிகளை வாங்குவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குவதன் மூலம் இது தொடங்குகிறது. குடும்பச் சொத்தில் பெண் பங்கு பெற வரதட்சணை என்பது மறைமுக வழி செய்கிறது என்று அது சொல்கிறது.






அடுத்த கட்டமாக, பெண்களிடையே கல்வியை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது, ஏனெனில் அதிகம் படித்த பெண்ணின் வரதட்சணை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.


கடைசியாக, இதில் இருக்கும் மற்றொரு ஆதாயம் என்னவென்றால் ஒரு பெண் அவலட்சணமாக இருந்தால் அவரை அதிக வரதட்சணை கேட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று அந்த பாடபுத்தகம் சொல்கிறது.


பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தச் சாரத்தின் படத்தை, அபர்ணா என்ற நபர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதை அடுத்து பல கமெண்ட்களும் குவிந்துள்ளன. ஆண்கள் பலர் இதில் என்ன தவறு உள்ளது என்பது போல கேள்வி எழுப்பி இருந்தனர். சிலர் அபர்ணாவின் ட்வீட்டை தொடர்ச்சியாக ஷேர் செய்து தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.






பாடப்புத்தகம் தவறான கருத்துக்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பெண்களை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்று அதில் கருத்து கூறியுள்ளனர். மற்றவர்கள் வரதட்சணைத் தடைச் சட்டம், 1961-ன் கீழ் இது எவ்வாறு சட்டவிரோதமானது என்பதைப் பற்றி பேசினர். மேலும் இந்த புத்தகத்தின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.