பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை வழங்க இந்திய ரயில்வே தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பல ரயில்களை ரயில்வே ரத்து செய்தும், மாற்றுப்பாதையில் மாற்றியுள்ளது. இதையடுத்து, பல இடங்களில் பணிகள் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நீங்கள் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை ஒருமுறை இங்கே பார்த்துவிட்டு செல்லவும். ரயில்வேயின் பல்வேறு மண்டலங்கள் இந்த தகவலை சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளன.


தென்கிழக்கு ரயில்வேயில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 


தென்கிழக்கு ரயில்வேயும் (08031/08032) பாலசோர்-பத்ரக்-பாலசோர் மெமு ஸ்பெஷலை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வருகின்ற டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 28 வரை ரத்து செய்யப்படுவதாக தென்கிழக்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளது.






தெற்கு ரயில்வேயில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 


தெற்கு ரயில்வே இன்றும் பல ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் பிரிவுக்கு இடையே தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக, இந்த ரயில்வே மண்டலம் அடுத்த சில நாட்களுக்கு பல ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. சில ரயில்களை ஓரளவு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் பட்டியலை இங்கே பார்க்கவும்.







பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு..? 



தற்போது டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தாமதமாகிய நிலையில், இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக விமானங்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டது.






இதையடுத்து, டெல்லி விமான நிலைய ஆணையம் பகிர்ந்துள்ள தகவலின்படி, டெல்லி விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக விமானம் வருவது மற்றும் இயங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் ஒரு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்றால், உங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்த்த பின்னரே வீட்டை விட்டு வெளியேறவும்.” என தெரிவித்துள்ளது.