உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கத்தை துவங்கி வைப்பதுடன், இந்திய கடற்படையின் புதிய கொடியை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார்.


ஐ என் எஸ் விக்ராந்த்


தற்சாா்பு பொருளாதாரம் என்று சில ஆண்டுகளாக வலியுறுத்தும் மோடியின் யோசனைக்கு, ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல் ஒரு புதிய மைல்கல்லாக விளங்குகிறது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பல் என்று இது பெயர் பெறுகிறது. போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுவாகும். இந்தக் கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக இதில் பொருத்தப்பட்டுள்ளன. 



புதிய கொடி வெளியிடப்படும்


கொச்சி கடற்படைத் தளத்தில் கடற்படையில் இந்த கப்பலை பயன்பாட்டிற்காக மோடி இணைத்து வைக்கிறாா். இதன்மூலம் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு சேர்த்து தான் இந்திய கடற்படைக்கு புதிய கொடி ஒன்றையும் வெளியிடுகிறார் பிரதமர்.


தொடர்புடைய செய்திகள்: ‘தளபதி 67’ -ல் விஜயின் ஹியூமருக்கு கேரண்டி.. லோகேஷூடன் இணைந்த முக்கிய பிரபலம்.. வைரலாகும் போட்டோ!


புதிய கொடி எப்படி இருக்கும்


இதுக்குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கொடியானது காலனித்துவ கடந்த காலத்தை அகற்றி, இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொடியின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக பகிரப்படவில்லை.



'செயின்ட் ஜார்ஜ் சிலுவை' இருக்காது?


வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, தற்போதைய கொடியில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் புதிய கொடியில் இருக்காது என்று தெரிகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இயக்கத்தின் போது வெளியிடப்படும் இந்த கொடி இனி அனைத்து இந்திய கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் கொடி இதற்கு முன் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது. 2001 முதல் 2004 வரையிலான 3 வருடத்தைத் தவிர, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து 'செயின்ட் ஜார்ஜ் சிலுவை' கொடியில் இடம்பெற்றுள்ளது. புதிய இந்திய கடற்படையின் கொடி இந்தியாவை அதன் காலனித்துவ கடந்த காலத்திலிருந்து பிரிக்கும் புதிய மைல்கல் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.