புனித ஹஜ் பயணிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 (செப்டம்பர் 23ஆம் தேதி) வரை நீட்டித்துள்ளது இந்திய ஹஜ் குழு.


இஸ்லாமியர்களின் புனித பயணம்:


ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் "HAJ SUVIDHA" செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.


இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் 23.09.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.01.2026 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம். வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்கள் அறிய இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)ஐ தொடர்பு கொள்ளலாம்.


புதிய ஹஜ் கொள்கை:


கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய இஸ்லாமியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமே சவுதி அனுமதி வழங்கியது. 


இதையடுத்து, ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி புதிய ஹஜ் கொள்கை வகுத்தது. 


இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்தியர்கள் செல்லும் வகையில் இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.


இதையும் படிக்க: Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ