நேற்று வெளிவந்த ஒரு புதிய அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69a இன் கீழ் 54 க்கும் மேற்பட்ட சீன ஆப்களை தடை செய்ய இந்திய அரசாங்கம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட ஆப்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த அறிக்கை கூறுவதுபடி டென்சென்ட், அலிபாபா, கேமிங் நிறுவனமான நெட்ஈஸ் போன்ற முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆப்கள் தடை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த 54 சீனப் ஆப்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆப்களின் "மறுபெயரிடப்பட்ட அவதாரங்கள்” என்று அறிக்கை கூறுகிறது. 2020 இல், இந்திய அரசாங்கம் PUBG மொபைல் போன்ற பிரபலமான நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்திருந்தது. லைட், டிக்டோக், கேம்ஸ்கேனர், மற்றும் பல ஆப்கள் அதில் தடை பெற்றிருந்தன. தற்போது அதே போல பல சீன ஆப்கள் இந்தியாவில் தடை பெற்றுள்ளன. இந்த தடைசெய்யப்பட்ட சீன ஆப்களை இனி இந்தியாவில் பயன்படுத்தமுடியாது.
இரு வருடங்களுக்கு முன்பு ஒரு சில சீன ஆப்கள் இந்தியர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளுக்கு ஒப்படைக்கிறாராகள் என்ற தகவல் வந்ததால் அதிரடியாக பல ஆப்களை தடை செய்திருந்தது. அப்போது டிக் டாக், பப்ஜி போன்ற ஆப்கள் இளைஞர்களை, மாணவர்களை அடியமையாயாக்குகின்றது என்ற அடிப்படையிலும் தடை செய்திருந்தனர்.அப்போது அந்த ஆப் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியையும் தெரிவித்து இருந்தனர்.
அதே போல இந்த புதிய உத்தரவை வெளியிட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்த சீன செயலிகள் இந்தியர்களின் முக்கியமான தரவுகளை சீனாவில் உள்ள வெளிநாட்டு சேவையகங்களுக்கு பகிர்வதாக கூறப்படுவதாக தெரிவித்திருந்தது. "இந்தியாவில் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த 54 ஆப்கள் நீக்கப்பட்டுவிட்டன" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த 54 சீன ஆப்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆப்களை போலவே உருவாக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட வேறு பதிப்புகள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த மூத்த அதிகாரி கூறுகையில், “டென்சென்ட் மற்றும் அலிபாபாவின் பல ஆப்கள், உரிமையாளர் குறித்த தகவல்களை மறைக்க வேறு பெயரில் பதிவு செய்திருக்கின்றனர். அவை சீனாவில் இருந்து இல்லாமல், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன, ஆனால் தரவு இறுதியில் சீனாவில் உள்ள சேவையகங்களுக்குத்தான் செல்கிறது. ByteDance-க்கு சொந்தமான TikTok மற்றும் Tencentக்கு சொந்தமான WeChat போன்ற ஆப்கள் பிளேஸ்டோரில் இல்லாமல், APK பைல்ஸ்-ஆக மாற்று வழிகளில் பதிவிறக்கம் செய்யக் கிடைத்து வந்தன, தற்போது அரசாங்கம் அதையும் கவனத்தில் எடுத்துள்ளது,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.