இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியான சக்தியின் 8-வது பதிப்பில் பங்கேற்க இந்திய ராணுவக்குழு இன்று பிரான்ஸ்-க்கு புறப்பட்டது. இந்தப் பயிற்சி நாளை (ஜூன் 18) முதல் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை பிரான்சின் லா கவாலரியில் உள்ள கேம்ப் லார்சாக்கில் நடைபெறும்.

Continues below advertisement

பிரான்சுடன் கைகோர்க்கும் இந்திய ராணுவம்: 

90 வீரர்களைக் கொண்ட இந்தியக்குழுவில், ஜம்மு- காஷ்மீர் ரைபிள்ஸின் ஒரு பட்டாலியன், இதர ஆயுதம் மற்றும் சேவைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 90 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சுக் குழுவில் 13-வது வெளிநாட்டு லெஜியன் ஹாஃப்-பிரிகேடின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

Continues below advertisement

செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, இருநாட்டு ராணுவத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி ஒத்திகை, திட்டமிடல், நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை இந்தப் பயிற்சியில் மேற்கொள்ளப்படும். 

உலக நாடுகள் கப்சிப்: 

இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான உறவு, தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு, இதற்கான விதை போடப்பட்டு, தற்போது அது பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது. இந்த இருதரப்பு உறவு பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, விண்வெளி, அணுசக்தி ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இந்தோ-பசிபிக் போன்ற புதிய பகுதிகளை உள்ளடக்கியது.

இந்தியாவுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் உள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்கள் (2016 ஒப்பந்தம்) மற்றும் P-75 திட்டத்தின் கீழ் ஆறு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

கூட்டு பயிற்சிகளை பொறுத்தவரையில், வருணா (கடற்படை, 1983 முதல்), சக்தி (ராணுவம்) மற்றும் கருடா (விமானப்படை) போன்ற வழக்கமான இருதரப்பு பயிற்சிகள் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துகின்றன.