இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா சமீபத்தில் அகமதாபாத் – லண்டன் விமானம் AI171-இல் ஏற்பட்ட பெரும் விபத்து, தொடர்ந்து பல்வேறு செயல்பாட்டு சிக்கல்கள் மற்றும் விபத்துகளால் விமானப் பயணிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலையை தீவிரமாக்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நடவடிக்கையை எடுத்து, ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உயர்மட்ட அதிகாரிகளை அவசர கூட்டத்திற்கு அழைத்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து:
கடந்த வாரம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பின்னர் ஏர் இந்தியா விமான சேவைகளில் தொடர்ந்து கோளாறு மற்றும் தாமதம் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தது.
DGCA சம்மன்:
இந்த விபத்துக்குப் பின்னர், ஜூன் 18 அன்று நடைபெறவுள்ள DGCA மெய்நிகர் கூட்டம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் கேம்பல் வில்சன் – ஏர் இந்தியா இயக்குநரும் CEO-வும், கேப்டன் பன்குல் மாத்தூர் – விமான செயல்பாட்டு இயக்குநர், அலோக் சிங் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி பாதுகாப்பு, பயிற்சி மற்றும் பராமரிப்பு துறைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர். கடந்த மாதங்களில் நிகழ்ந்த விபத்துகள், தாமதங்கள், விமான ரத்துகள், மற்றும் பயணிகள் இடையே ஏற்பட்ட அதிருப்திகள் குறித்த விவாதங்கள் நடைப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர் தாமதங்கள்:
AI171 சம்பவத்திற்குப் பின், ஏர் இந்தியா தொடர்ச்சியாக விமான சேவையில் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகிறது. இன்று மட்டும் 6 ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி - துபாய், டெல்லி - வியன்னா, டெல்லி - பாரீஸ், அகமதாபாத் -லண்டன், பெங்களூரு - லண்டன், லண்டன் - அமிர்தரசஸ் ஆகிய சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.
பாதுக்காப்பு குறித்த கேள்விகள்:
விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ட்ரீம்லைனர் விமானத்தில் ஈடுபட்ட விமானிகள் மற்றும் அனுப்புநர்களுக்கான விரிவான பயிற்சி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஏர் இந்தியாவை DGCA கேட்டுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமானப் பயிற்சி பள்ளிகளுக்கும் ஒழுங்குமுறை அமைப்பு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, மேலும் நிறுவப்பட்ட பயிற்சி நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முழுமையான இணக்க சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவுக்கு அழுத்தம்:
நடந்து வரும் விசாரணை மற்றும் செயல்பாட்டு இடையூறுகள், பாதுகாப்பு மற்றும் இணக்க இடைவெளிகளை விரைவாக நிவர்த்தி செய்ய ஏர் இந்தியாவின் தலைமையின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளன. டிஜிசிஏவின் அதிகரித்த கண்காணிப்பு, மரண விபத்துக்குப் பின்னால் உள்ள காரணங்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பயிற்சி மற்றும் பராமரிப்பில் உள்ள முறையான சிக்கல்கள் பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எதிர்கால ஆபத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அழுத்ததை ஏர் இந்தியாவிற்கு கொடுத்துள்ளது.