கடந்த 2001 ஆம் ஆண்டு மூடப்பட்ட கே.ஜி.எப் சுரங்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
கோலார் தங்க வயல் (Kolar Gold Fields)
கே.ஜி.எஃப் (KGF) என்று பிரபலமாக அறியப்படும் கோலார் தங்க வயல் (Kolar Gold Fields), கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுரங்கப் பகுதியாகும். இது ஒரு காலத்தில் உலகின் மிக ஆழமான மற்றும் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் சுரங்கங்களில் ஒன்றாக இருந்தது.
கோலாரில் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் எடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழ் மன்னர்களான சோழர்கள் காலத்தில் இங்கு தங்கம் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மூடப்பட்ட தங்கச் சுரங்கம்
இந்தியாவின் பொன் நகர் என்று அழைக்கப்பட்ட பகுதியாக இது இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று KGF சுரங்கங்கள் முழுமையாக மூடப்பட்டன. குறிப்பாக தங்கம் வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகமானதால், தங்கச் சுரங்கத்தை நடத்த முடியாத சூழல் உருவாகியது. இதனால் புகழ் பெற்ற கே.ஜி.எஃப் தங்க சுரங்கம் மூடப்பட்டது. தொடர்ந்து கே.ஜி.எஃப் -இல் இருந்து தங்கம் எடுப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்ற.
மீண்டும் தங்கச் சுரங்கம் ?
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக அமைச்சரவை பாரத கோல்டு நிறுவனத்துக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுரங்க கழிவுகள் மற்றும் 13 மையங்கள் மீது மேல்மட்ட சுரங்க பணிகள் மேற்கொள்வதற்கான மத்திய அரசின் திட்டத்தை ஏற்றது. இந்த கழிவுகளில் தங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவுகளில் உள்ளசுரங்க படிமங்களில் இருந்து கிட்டத்தட்ட 23 டன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான அளவில் உற்பத்தி தொடங்கினால் 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் இங்கு தங்கம் ஆழமாக வெட்டி எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆழமாக வெட்டி எடுப்பதற்கு பதிலாக, மேல்மட்ட படிமங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. தற்போது அதிக அளவு தொழில்நுட்பம் அளந்து உள்ளதால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கம் எடுக்கப்பட உள்ளது.
அடுத்து என்ன நடக்கும் ?
அரசு ஒப்புதல் கொடுக்கப்பட்டது தொடர்ந்து, ஆரம்பகட்ட மேல்மட்ட சுரங்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாட்டு அனுமதிகள் கிடைத்தவுடன் முழு அளவில் வணிக உற்பத்தி துவங்கும்.
நவீன பிரித்தெடுத்தல் தொழில்நுட்பங்களைக் கொண்டு 23 டன் தங்கத்தை எடுப்பதின் மூலம், தங்க உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் கேஜிஎப் தங்கம் நாட்டின் பெருமையை மீட்டெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் விடுதலைக்குப் பின் முதல் முறையாக மூடப்பட்ட தங்கச்சுரங்கம் ஒன்று மீண்டும் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.