பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி:


இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ)  தெரிவித்துள்ளது.






போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் புதிய வகை பிரமோஸ் ஏவுகணையின் (extended range version of the BrahMos Air-launched missile, ) சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 





இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறனுடைய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.


கடற்பகுதியில் இருந்து 400 கி.மீ தொலைவில் இருந்த இலக்கை தாக்கி  பரிசோதனை வெற்றியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ( BrahMos Aerospace (BAPL)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (Defence Research and Development Organisation (DRDO) விஞ்ஞானிகள், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (Hindustan Aeronautics Limited (HAL))விமானப் படை மற்றும் கடற்படை  ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.