கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் குறுந்தொகுப்பு தான் இது. அவசர உலகில் இந்த தலைப்பு செய்திகள் உங்களுக்கு நாட்டு நடப்பை எளிதில் விளக்கும்.


1. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. 


2.  ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு.


3. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் மூலம் புகாரளிக்க முன்வர வேண்டும். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என்று சென்னை காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.


4. தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


5. ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்புவாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள தி பேமிலிமேன் 2 இந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.


6. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலானது. விதிகளை மீறியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


7. மதுரை ஜோடிகள் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


8. 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு இன்று பதில் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


9. யாஸ் புயல் மேற்கு வங்கத்தில் நாளை கரையை கடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


10. இன்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு


11. கடந்த 11ஆம் தேதி பதவி ஏற்காத 9 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


12. கருப்பு, வெள்ளை வரிசையில்  உத்தர பிரதேசத்தில் மஞ்சள் பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் காசியாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இது போன்ற அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் www.abpnadu.com இணையதளத்துடன்.