Breaking News Live: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கொண்டவர்களில் 98.3% பேர் குணமடைந்துள்ளனர்
Breaking News LIVE In Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு, பல திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.3856.70 கோடி அனுமதித்துள்ளது. இதில் ரூ.2282.59 கோடி இது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 461.16 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.276.88 கோடி வழங்கப்பட்டுள்ளது
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,27,635 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 751 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,82,943 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,492 ஆக அதிகரித்துள்ளது.
UPA இப்போது இல்லை.. சரத் பவார் உடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸை விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50% பங்குகளை விற்றார் சத்யா நாதெள்ளா..
’தல’ என பட்டப்பெயருடன் அழைக்க வேண்டாம் - அஜித்குமார்
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 101. 50 ஆக அதிகரித்து உள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஒன்று ரூ. 101. 50 ஆக உயர்ந்து ரூ. 2,234 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சரவை கூட்டம் மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், 12 எம்,பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்,பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் :-
• அதிமுக கொடியையும் பொதுச்செயலாளர் என்ற பதவியையும் பயன்படுத்தும் சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு
• நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டி தீர்மானம்
• திமுக அரசை கண்டித்து தீர்மானம்
உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வழிகாட்டுதல் குழுவை கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு.
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் புல்வாம அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Background
Breaking News LIVE In Tamil:
அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளரும் முன்னாள் எம்.பி.,யுமான அன்வர்ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர்ராஜா பங்கேற்ற போது, அவர் அதற்கு முன் இபிஎஸ்.,யை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சனை எழுப்பியதும், அன்வர்ராஜாவை கூட்டத்திலிருந்து வெளியேற்ற கூறியதும் அக்கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அதன் பின் அந்த விவகாரத்தை அங்கிருந்த நிர்வாகிகள் பேசி சமரசம் செய்த நிலையில், அதன் பின் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேர்காணல் அளித்த அன்வர்ராஜா, கூட்டத்தில் நடந்தபல உண்மைகளை கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், சசிகலா குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். அத்தோடு பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் சற்று முன் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -