தமிழ்நாடு


* கோடநாடு கொலை, கொள்ளை வாழக்கில் சாட்சியங்களை கலைத்தாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


* வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.


* சசிகல விவகாரத்தில் அதிமுகவில் மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கண்டனம்.


* ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனிநீதிபதியின் கருத்து தனது மனதை புண்படுத்தியதாக நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


* தமிழ்நாட்டில் நேற்று 1,22,700   மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,112 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 144   பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.


இந்தியா 


* கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாய் குர்தாஸ் பொறியியல் கல்லூரியில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதி அறைகளும் சூறையாடப்பட்டுள்ளன. 


* பேஸ்புக்கில் பெரியாறு அணை குறித்து சர்ச்சையாக கருத்து பதிவிட்ட நடிகர் பிருத்விராஜிக்கு தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


* உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு வழக்கில் நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


உலகம்


* கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ் நோய் பரவும் என பிரேசில் அதிபர் மீண்டும் சர்ச்சையாக கருத்து தெரிவித்தார்.


* புதிதாக பிரிட்டனில், 36,567, ரஷ்யாவில் 37,930, சீனாவில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏர்பட்டுள்ளது.


* உலகம் முழுவதும் 24.47 கோடி பேருக்கு கொரோனா. 49.69 லட்சம் பேர் உயிரிழந்தனர். 22.19 கோடி பேர் குணமடைந்தனர்.


பொழுதுபோக்கு


* திரைத்துறை சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.


* சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷூம், துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் பெற்றனர்.


விளையாட்டு


* ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத்தை மையமாகக் கொண்டு இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் இரண்டு அணிகளின் உரிமை 12,715 கோடிக்கு விற்பனையானது.


* டி20 உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.


* இன்றைய டி20 உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண