தமிழ்நாடு


* 1 ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பு வரை நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச்சொல்லி நிர்பந்திக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


* பாஜக மீது கை வைத்தால் திமுகவிற்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும். மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்ல, தமிழ்நாடு மின்சார அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகதான் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுகிறது - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை


* முல்லை பெரியாறு அணையில் இருந்து அதிகளவு நீரை தமிழ்நாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.


* தமிழ்நாட்டில் நேற்று 1,24,177  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,127 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 146 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,358 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். 


இந்தியா


* பண்டிகைகளை உள்நாட்டு பொருட்கள் வாங்கி கொண்டாடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.


* ஜி20 மற்றும் பருவநிலை மாநாடுகளில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி, இங்கிலாந்து செல்கிறார்.


* மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் புதிய வகை கொரோனா வேகமாக பரவுகிறது.


* போதை வழக்கில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


* நடிகர் ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் போதை பவுடர் சர்க்கரை பவுடராக மாறிவிடும் என மகாராஷ்டிரா அமைச்சர் சகன் புஜ்வால் கூறியுள்ளார்.


உலகம்


* உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 49.63 லட்சத்தை கடந்தது.


* ஏவுகணை சோதனை நிறுத்திவிட்டு பேச வருமாறு வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.


பொழுதுபோக்கு


* டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. தேர்வான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார்.


* திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்படுகிறது.


விளையாட்டு


* டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.


* மற்றொரு போட்டியில் இலங்கை அணி வங்கதேசம் நிர்ணயித்த 172 ரன்களை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண