தமிழ்நாடு


* நவம்பர் 1ஆம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம், 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.


* தமிழ்நாட்டில் உள்ள திரையரங்களில் உள்ள இருக்கைகளுக்கு 100 சதவீதம் வரை அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


* அனைத்துவகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.


* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 


* தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்தியா


* காஸ்ட்லி மொபைல் போன் வாங்குவதற்காகவும் ஸ்டார் ஹோட்டலில் மூக்கைப் பிடிக்க சூப்பர் சாப்பாடு சாப்பிடுவதற்காகவும் ஒடிசாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் கட்டியை மனைவியை வேறோருவருக்கு விற்ற சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து தயார் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


* கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள சூழலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஹஜ் பயணத்திற்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.


உலகம்


* உலகில் 24.40 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 49.58 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் 22.11 கோடி பேர் குணமடைந்தனர்.


* கிட்டத்தட்ட 9 மாதங்கள் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைக்காட்டாத டிரம்ப் . தற்போது தனக்கு சொந்தமாக, செயலியுடன் கூடிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். “ட்ரூத் சோஷியல் “ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


* மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பொழுதுபோக்கு


* மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் 22 வயது மகள் மெடோ வாக்கர் நடிகர் லூயிஸ் தார்ண்டன் ஆலன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பால் வாக்கரின் மகளின் திருமணத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடந்துகொண்ட வின் டீசலுக்கு ரசிகர்கள் பாராட்டு.


* பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகிறது.


விளையாட்டு


* உலகக் கோப்பை டி20 சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த 56 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக எட்டிப்பிடித்து வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கியது.


* டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக மாலை 3.30 மணிக்கு போட்டியில் குரூப் 1 பிரிவில் உள்ள இலங்கை -  வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண