மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டில் ஒரே நாளில் 68 ஆயிரத்து 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 624-இல் இருந்து ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 644-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்தை 552-இல் இருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 843-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 32 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 762ல் இருந்து ஒரு கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 993 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 782 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.