ஆரம்ப நிலையில் இருந்தே இந்திய அளவில் மகாராஷ்ட்ராவில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 


நேற்றைய நிலவரப்படி, மகாராஷ்ட்ராவில் 40,414 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,25,901 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 108 பேர் கொரோனவால் மரணித்துள்ளார். இந்நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த நேற்று முதல் மகாராஷ்ட்ரா முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை அமலில் இருக்கும்.




மேலும் மக்கள் விதிகளை தொடர்ந்து புறக்கணிக்கும்பட்சத்தில் அடுத்த லாக்டவுனிற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். மாநில கோவிட் 19 தடுப்பு பணிக்குழுவின் பரிந்துரையின் பேரில், பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு லாக்டவுனை செயல்படுத்த திட்டம் வகுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகிவுள்ளது.