மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 56 ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 644-இல் இருந்து ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855-ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்தை 552-இல் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 114-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 37 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 993-இல் இருந்து ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 21 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.