தமிழகத்தை போல கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நேற்று பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் முதல்வர் எடியூரப்பா. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக பரிசோதிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

  


கொரோனா பரவ முக்கிய காரணமாக கருதப்படுவது முகக்கவசம் அணியாதது தான். ஆகையால் முகக்கவசம் அணியாமல் அலட்சியம்காட்டும் மக்களுக்கு அபராதம் விதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதத்தை விட 1 சதவிகிதம் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் அளவு அதிகாறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கோ அல்லது முழுநேர ஊரண்டகோ தற்போதைக்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.