இலங்கை உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணியின் அதிரடி வீரர் திசரா பெரேரா தற்போது விளையாடி வருகிறார். இலங்கை ஆர்மி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பில் களமிறங்கிய அவர், திலன் கூரே என்ற சுழற்பந்து வீச்சாளரின் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார்.




இதன்மூலம் உள்ளூர் போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் திசர பெரேரா. இதுமட்டுமில்லாமல் இலங்கை உள்ளூர் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், கிப்ஸ் உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் மட்டுமே 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்துள்ளனார்.