இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic Product)) முதல் முறையாக 4 டிரில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி உலகளவில் இந்தியாவின் பொருளாதார வலிமை, ஸ்திரத்தன்மை சான்றாகும். உலக அளவில் இந்திய பொருளாதாரம் எட்டியுள்ள இந்த மைல்கல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் அரசின் தொடர் முன்னெடுப்புகளைச் சுட்டிக் காட்டுவதாக சமூக வலைதளத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) அதிகாரப்பூர்வ தராவாக சில ஊடகங்களில் இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் வெளியிடப்பட்டிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நாமினல் டம்ஸ்படி, இந்தியாவின் ஜி.டி.பி. 4 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. உலக அளவில் 4 ட்ரில்லியல் அமெரிக்க டாலர் அளவிற்க்கு ஜி.டி.பி. உயர்ந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனிநபரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, வறுமையை ஒழிப்பதிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகா நைட் ஃப்ராங்க் இந்தியா ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் விவேக் ரத்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது நீடித்ததாகவும் உறுதியுடனும் வளர்ச்சி கண்டு வருகிறது. டிஜிட்டல் துறையில் மாற்றம், ஃபினான்சியல் வளர்ச்சி, அனைவருக்கும் தேவையானவற்றை வழங்குதல், நிர்வாகத்தில் வெளிப்படத்தன்மை, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதாக விவேக் ரதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை டிவிட்டரில் பகிந்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃப்ட்னாவிஸ், “ நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. அழகான வளர்ச்சி பயனம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியானது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கணிப்பின்படி, 6.5 சதவீதத்தை விட சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, நவம்பர் 16-ன் புல்லட்டின்படி, இந்தியாவின் பொருளாதாரம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 7.8 சதவிகிதம் விரிவடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க..