நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பூமியிலிருந்து 30 கிலோமீட்டர் உயரத்தில் இந்திய தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டது. இளம் விஞ்ஞானிகளை கொண்ட விண்வெளி அமைப்பான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், தேசிய கொடியை பலூன் மூலம் விண்வெளிக்கு  அனுப்பியுள்ளது.






பூமிக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் பறக்கும் கொடியின் வீடியோவை வெளியிட்டுள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், "விண்வெளிக்கு அருகில் 30 கி.மீ. தொலைவில் இந்தியக் கொடியை ஏற்றி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.


அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாளும் இந்தியாவை பெருமைப்படுத்த கடுமையாக போராடும் மக்களுக்கு இது பெருமை" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கொடி ஏற்றப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்ட "AzaadiSat" என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. 


ஆனால், செயற்கைக்கோள் நிலையற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பயன்படுத்த முடியாது அளவுக்கு சென்றுவிட்டது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


 






இதற்கிடையில், இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரி இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இந்தியக் கொடியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சுதந்திர தினத்தன்று, எனது புலம்பெயர்ந்த தந்தையின் சொந்த நகரமான ஹைதராபாத் பிரகாசமாக ஜொலிக்கும்.


@Space_Station இலிருந்து நான் பார்க்க முடிந்த இந்திய புலம்பெயர்ந்த மக்களை நினைவுபடுத்துகிறேன். இந்திய அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஒரு இடம் நாசாவாகும். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் கொண்டாட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண